மனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்!.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை!’.. அப்படி என்னதான் நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் மனைவிக்குத் தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்க சென்ற 500 ஆண்களால் தற்போது வெளியே சொல்ல முடியாத அளவிற்கான சிக்கல் உண்டாகி உள்ளது.
கனடாவின் Ontario மாகாணத்தின் Toronto தலைநகருக்கு உட்பட்ட The Brass Rail இரவு விடுதியில் பணி செய்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு சென்ற பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு இரவு நேரத்தில் நடனம் பார்க்க சென்ற 500 க்கும் மேலானோர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள பொது சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள் . ஆனால் அந்த ஆண்கள் என்ன காரணத்துக்காக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து பேசிய Ontario பிரதமர் (premier) Doug Ford, “இந்த ஆண்கள் தங்கள் மனைவியிடம் இது தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை மனைவிமார்களிடம் நடனம் பார்க்க சென்ற உண்மையை கூறிவிட்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து கவலையாகத்தான் இருக்கிறது. எனினும் அந்த மனைவிகளுக்காக வருந்துகிறேன். எனக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே The Brass Rail என்று அழைக்கப்படும் அந்த இரவு விடுதி தங்கள் பணியாளர் ஒருவருக்கு கொரோனா என்று கேள்விப்பட்டதும் விடுதி மூடப்படுவதாக அறிக்கையும் விட்டுள்ளது.
மற்ற செய்திகள்