'30 வருஷம் போலீஸ் கண்ணுல மண்ண தூவி வாழ்ந்தவரு...' 'திடீர்னு ஒருநாள் வந்து நின்னு...' - 'வாழ்க்கை' ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து தப்பித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் யூகோஸ்லாவியா நாட்டில் பிறந்த டார்கோ டக்கி டெசிக் (Darko Dougie Desic) கடந்த 1992-ஆம் ஆண்டு கஞ்சா வளர்த்த குற்றத்திற்காக சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள கிராப்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
டார்கோ டக்கி தன்னுடைய சிறை வாசம் முடிவதற்கு முன்னரே, அதாவது சிறை சென்ற 13 மாதங்களில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். போலீசார் அவரை பிடிக்க மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டாலும் டார்கோ டக்கி இருக்கும் இடத்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சுமார் 29 ஆண்டுகள் கடந்த நிலையில் டார்கோ டக்கி தானாகவே முன்வந்து காவல் நிலையத்திலேயே மீண்டும் சரண் அடைந்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக அவர் சொல்வது கொரோனா வைரஸ்.
1993-ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிய டார்கோ டக்கி சிட்னி நகருக்கு சென்று அங்கு கட்டிடம் கட்டுபவர் மற்றும் கைவினை கவிஞராக பணியாற்றி வந்துள்ளார். தன் அடையாளத்தை மறைக்க அனைவரிடமும் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என 29 வருடங்களாக மருத்துவமனைக்கு கூட சென்றதில்லை. ஆனால், இந்த கொரோனா வைரஸோ ஆஸ்திரேலியாவில் பரவத் தொடங்கியது முதல் டார்கோ டக்கி டெசிக்கிற்கு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
அவரின் தனது வேலைகளை இழந்து, வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதன்பின், கடற்கரையில் படுத்து உறங்க தொடங்கிய போது இதற்கு சிறையே பரவாயில்லை என எண்ண தொடங்கிய அவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், டார்கோ டக்கி டெசிக்கை முன்புபோல் சுதந்தர மனிதராக பார்க்க வேண்டும் என்று அவர் வசித்த பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்ததோடு, அவருக்கு ஆதரவாக வாதாட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரும் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு இதுவரை சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்