'இந்தியாவுக்கு வரும் டிரம்ப் பயன்படுத்திய கொரோனா மருந்து'... 'ஒரு டோஸின் விலை இவ்வளவா'?... தலை சுற்றவைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்புக்கு அளிக்கப்பட்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகின் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாடுகள் தற்போது மெல்ல மெல்லச் சகஜ நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இந்தியாவின் நிலை தான் மிகவும் மோசமாக உள்ளது. மற்ற உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய ஆயுதமாக இருந்தது தடுப்பூசி.
தற்போது இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி கடந்த 10-ஆம் திகதி இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கேஸிர்விர்மாப், இம்டெவிமாப்' ஆகிய இரு மருந்துகளை ஒன்றாகக் கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசரக் கால பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த மருந்து குறித்து ரோச் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு மருந்துகள் கொண்ட பாக்கெட்டின் அதிகபட்ச விலையாக 1,19,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டோஸ் மருந்தின் விலை 59,570 ரூபாய் எனவும் ஒரு லட்சம் டோஸ் மருந்துகள் வாங்கினால், 2 லட்சம் நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து கொரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் உடல் எடை 40 கிலோவுக்குக் குறைவாக இருப்போர் போடலாம்.
கொரோனா உறுதி செய்யப்பட்டபின், அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் செலுத்தலாம். இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரைப் காக்க முடியும், உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்