ஆணின் விந்து வீரியத்தை அழிக்குமா கொரோனா வைரஸ்?!.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் ஆண் விந்துவின் வீரியத்தை இழக்கச் செய்யலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆணின் விந்து வீரியத்தை அழிக்குமா கொரோனா வைரஸ்?!.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆண்களில் விந்துவின் உயிர்ச்சத்து சேதமாகலாம், ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுதொடர்பான கட்டுரை ஒன்று ரீபுரொடக்‌ஷன் (Reproduction) என்ற இதழில் வெளியாகியுள்ளது.

COVID-19 may damage sperm quality, Reduce fertility in men, New Study

அதில் பிரான்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறிகையில், ‘பரிசோதனையில் கிடைத்த ஆதாரங்களின்படி கோவிட்-19 வைரஸ் தாக்கினால் ஆண்களில் விந்து சக்தி குறைபாடு ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படுவது தெரியவருகிறது’ என்று கூறுயுள்ளனர். ஆனால் இந்த ஆய்வு முடிவு குறித்து மற்ற நிபுணர்கள் கூறும்போது, கொரோனா வைரஸினால் விந்து வீரியம் குறையும் என்பது நிரூபிக்கப்படாத ஒன்று என்று மறுக்கின்றனர். கோவிட்-19 மூச்சுக்குழல், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைத்தான் உருவாக்கும். அதுவும் வயதானவர்களையே அதிகம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

COVID-19 may damage sperm quality, Reduce fertility in men, New Study

ஆனால் தற்போது ஆணின் குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தி ஹார்மோன்களையும் கோவிட்-19 பாதிக்கும் என்று இந்த ஆய்வு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. நுரையீரல் திசுக்களில் காணப்படும் கொரோனா வைரஸ் ஆண் விந்தணுக்களிலும் காணப்படுகிறது என்று ஏற்கெனவே வந்த ஆய்வுகளும் கூறுகின்றன. கோவிட்-19 நோயாளிகளில் நோய் தாக்கிய தருணங்களில் ஆண்மைக் குறைபாடு, விந்தணு வீரியம் குறையும் என்றாலும் கோவிட்டிலிருந்து குணம்பெற்ற பின், விந்தணுவின் வீரியம் மேம்படும் என்று இந்த ஆய்வு நம்பிக்கை அளிக்கிறது.

மற்ற செய்திகள்