'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்?!!... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுக்க பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விளைந்துள்ள ஒரு மிகப்பெரும் நன்மை குறித்து நாசா ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்த பிறகு தொற்றை கட்டுப்படுத்த உலகம் முழுக்க பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் வாகனப் போக்குவரத்து கணிசமாக குறைந்தது. இதையடுத்து அதன் பலனாக பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி தற்போது பல நாடுகளிலும் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எங்குமே இன்னும் இயல்புநிலை முழுவதுமாக திரும்பவில்லை.
குறிப்பாக பல நாடுகளிலும் பள்ளிகள், கல்லூரிகள் இன்னமும் மூடப்பட்டு இருக்கும் சூழலில், கொரோனா ஊரடங்களால் உலகளவில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது வாகனப் போக்குவரத்து குறைந்ததாலும், தொழிற்சாலைகள் முடங்கியிருந்ததாலும் எரிபொருள் பயன்பாடு குறைந்து, உலகளவில் நைட்ரஜன் டையாக்ஸைட் வெளியேற்றம் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைந்துள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 46 நாடுகளில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நடத்தப்பட்ட 61 நகரங்களில் 50 நகரங்களில் நைட்ரஜன் டையாக்ஸைட் அளவு 20 முதல் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்றில் நைட்ரஜன் டையாக்ஸைட் அளவுகள் நியூ யார்க்கில் 45 விழுக்காடும், மிலனில் 60 விழுக்காடும் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால் காற்றின் தரத்தில் பாசிட்டிவான தாக்கம் இருக்கும் என முன்பே எதிர்பார்த்ததாக ஆய்வுக் குழுவின் தலைவர் கிறிஸ்டொபர் கெல்லர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்