10 கிலோ வரைக்கும் 'எடைய' கொறைக்கலாம்... 'நெறைய' சத்து இருக்கு... பசியில் வாடும் மக்களுக்கு 'அதிர்ச்சி' அளித்த அதிபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா காரணமாக பசியால் வாடும் மக்களுக்கு வடகொரிய அரசு அதிர்ச்சி அறிவுரை வழங்கி இருக்கிறது.
வல்லரசு நாடுகளே கொரோனா காரணமாக மோசமான நிலையை எட்டியுள்ளன. இதனால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் ஆடிப்போய் இருக்கின்றன. அந்த வகையில் பொருளாதார தடை காரணமாக வடகொரியா நாட்டில் தற்போது பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
இந்த நிலையில் வடகொரிய அரசு அதிர்ச்சி அறிவுரை ஒன்றை மக்களுக்கு அளித்துள்ளது. அதன்படி அரிசி, மீன், பழம், சோளம், இறைச்சி ஆகியவைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு விதமான ஆமை வகையை உண்ணும்படி தெரிவித்து இருக்கிறார்களாம்.
ஆமையில் ஏராளமான ஊட்டச்சத்து இருக்கிறது என்றும், தொடர்ந்து உண்டு வந்தால் ஹெபடைடிஸ், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும் எனவும் விளம்பரம் செய்து வருகிறது. இது மட்டுமின்றி அரசாங்க மருத்துவர்கள் உருவாக்கி இருக்கும் தேநீரை அருந்தினால் பசி எடுக்காது 40 நாட்களில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்