100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

100 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன.

100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனாவுக்கு ஆஸ்திரேலிய நாடும் விதிவிலக்கல்ல. கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மே மாத இறுதியில் அங்கு கொரோனா 75% கட்டுக்குள் வந்தது. ஆனால் 10 நாட்களுக்கு முன்னர் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் அங்கு கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 109 தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் 2-வது அலை உருவாகக்கூடும் என்ற அச்சத்தில் அடுத்த 6 வாரங்களுக்கு அங்கே கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல மற்றொரு பெரிய மாகாணமான ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக மெல்போர்ன், விக்டோரியா மாகாண எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன் 1919-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சலின் போது இரண்டு மாகாண எல்லைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,755 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆகவும் உள்ளது.

மற்ற செய்திகள்