'கோவாக்சின்' போட்டவங்க 'பட்டாசு' வெடிச்சு கொண்டாடுங்க...! இந்த 'ஹேப்பி நியூஸ்'காக தானே இத்தனை நாளா காத்திருந்தோம்...! - அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்தியாவில் இயங்கும் பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் தடுப்பூசியை கண்டுபிடித்தது.
அதன் கூடவே பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோவிஷீல்டு மருந்தும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும், உலக சுகாதார அமைப்பு பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்ததோடு பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இருந்தது.
இதன்காரணமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்தியாவிற்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம், ஆனால், வெளி நாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. உலகசுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுக்காத காரணத்தால் பல வெளிநாடுகளும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன்காரணமாக பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்தது. தற்போது உலக சுகாதார அமைப்பு கோவக்சினை அங்கீகாரித்துள்ளது.
பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அனுமதி கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்