‘20 பேருக்குதான் சொன்னேன்.. 200 பேர் எப்படி வந்தாங்கனு தெரியல!’.. கொரோனாவில் குளுகுளு பார்ட்டி.. ஏற்பாடு செய்த பெண்.. நீதிபதி அளித்த பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்மான்செஸ்டரில் வாழும் இளம் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இனி யாரும் நுழையக்கூடாது என்று பிரிட்டன் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மான்செஸ்டரில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் அனைவரையும் அழைத்து பாராட்டி வைத்துள்ளார். கொரோனா பரவி வரும் சூழலில், நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக கூட்டம் நடத்தக் கூடாது என்று பிரிட்டனில் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 200 பேருடன் தன் வீட்டில் பார்ட்டி நடத்தியுள்ளார் ஒரு பெண்மணி. போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த போலீசார் இந்த பார்ட்டியை நிறுத்த முயற்சித்தபோது, வீட்டுக்குள் இருந்த பலர் பல பொருட்களை தூக்கி போலீசார் மீது எறிந்தனர்.
இதனால் போலீசார் வேறு வழியின்றி பின்வாங்கினர். எனினும் இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில் இந்த போட்டியை நடத்தியவர், அந்த வீட்டின் சொந்தக்காரரான Charlene Proham(27) என்கிற இளம் பெண் என்பது தெரியவந்தது. அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கொரோனா சூழலில் பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதோடு போலீசாருக்கும் பிரச்சினை ஏற்படுத்தியதால் அந்த பெண்ணின் வீட்டை மூடுவதற்கு உத்தரவிடுவதாகவும், குறைந்தது இனி யாரும் மூன்று மாதங்களுக்கு அவருடைய வீட்டுக்குள் நுழைய கூடாது, அப்படி தடையை மீறி அவரது வீட்டுக்குள் நுழைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்கும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அப்பெண்ணுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டதுடன், “இந்த தீர்ப்பால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?” என்றும் அப்பெண்ணை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், டைமென்ஷியா பிரச்சனையால் அவதியுறும் தன் தாய் Humle என்ற இடத்தில் வசித்து வருவதாகவும், அவரை தான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட நீதிபதி, “அப்படியானால் நீங்கள் உங்கள் தாய் வீட்டுக்கு சென்று அவரை கவனித்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் உங்கள் வீட்டுக்கு வரக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனிடையே அந்த வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்ட்டியில் போட்டியில் பங்கேற்கும் வீடியோக்களை போலீசார் வெளியிட்டனர். ஆனால் பார்ட்டி குறித்து பேசிய Charlene Proham, தான் 20 பேரை மட்டுமே பார்ட்டிக்கு அழைத்ததாகவும், ஆனால் 200 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளதுதான் அதிர வைத்துள்ளது.
மற்ற செய்திகள்