'தம்பதிக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா, அத வச்சு வீடு, கார் வாங்க பிளான் போடாமல்'... தம்பதி போட்ட வேற லெவல் பிளான்!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒருவருக்கு லாட்டரி மூலம் அதிக பணம் கிடைத்தால் முதலில் தங்களது தேவையாக இருக்கும் சில கனவுகள் அல்லது ஆசைகளை அதன் மூலம் நிறைவேற்ற நினைப்பார்கள்.
ஆனால், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தங்களுக்கு லாட்டரி அடித்த பின் செய்து வரும் செயல் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் கோவென்ட்ரி பகுதியை சேர்ந்தவர் பில். இவரது மனைவி பெயர் கேத் முல்லர்கி. இந்த தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரி மூலம் ஒரு மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்துள்ளது. முதலில் இந்த பணம் மூலம் இரண்டாவதாக ஒரு வீடு வாங்க திட்டம் தீட்டியுள்ளனர்.
ஆனால், அதன்பிறகு தங்களது திட்டத்தை மாற்றிய தம்பதியினர், தங்களாலான உதவியை ஆதரவற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என நினைத்துள்ளனர். அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 100 முதியவர்களுக்கு அறுசுவை விருந்தை படைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, அனைத்து மக்களையும் ஒரு வழி செய்தது. ஊரடங்கின் காரணமாக, ஏழை மக்கள் உணவில்லாமல் தவித்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்ட பில் - கேத் தம்பதி, கொரோனா காலத்தில் ஆதரவற்று தவித்து வந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தனர். இதற்காக சமையல் நிபுணர் ஒருவரை ஏற்பாடு செய்து, ஊரடங்கு காலம் முழுவதும் உணவுகளை வழங்கி வந்துள்ளனர். தற்போதும் தொடர்ந்து ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை பில் - கேத் தம்பதியர் வழங்கி வரும் நிலையில், இவர்களின் நெகிழிச்சிமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மற்ற செய்திகள்