"நாங்க பெற்றோராக போறோம்".. ஆண் தம்பதி மகிழ்ச்சி பதிவு.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு ஆகியோர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருவர் மீது ஒருவர் என காதலில் விழுந்துள்ளனர். தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ற சூழலில் அப்போது முதலே ஒன்றாக இணைந்து வாழவும் தொடங்கி உள்ளனர்.

"நாங்க பெற்றோராக போறோம்".. ஆண் தம்பதி மகிழ்ச்சி பதிவு.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!!

Also Read | 104 பேர் மரணமடைந்த விமான விபத்து.. கடைசியா பைலட் சொன்ன வார்த்தை.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..!

இந்திய - அமெரிக்கர்களான அமித் ஷா மற்றும் ஆதித்யா ஆகியோர், சில தடைகளை தாண்டி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இவர்கள், தங்களின் திருமண புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்த புகைப்படங்கள் அந்த சமயத்தில் அதிக வைரலாகி இருந்த நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், தற்போது மற்றொரு மகிழ்ச்சியான தகவலையும் தங்களின் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். தங்களின் பல வருட கனவு பூர்த்தி ஆகி விட்டதாகவும், அப்பா ஆகப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள ஆதித்யா மற்றும் அமித் ஷா ஆகியோர், குழந்தையின் Ultra Scan புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். மே மாதத்தில் இவர்களின் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

couple who went viral after their traditional marriage expecting first

ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பொதுவாக குழந்தை பெற்று கொள்வது பற்றி யோசிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் நாங்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசி இருந்ததாகவும் ஆதித்யா மற்றும் அமித் ஷா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

அதே போல, குழந்தை பெற்றுக் கொள்ள வழி தேடிய போது வாடகைத் தாய் உள்ளிட்ட விஷயங்களை யோசித்து இறுதியில் Egg Donor ஒருவரின் உதவியுடன் அவர்கள் தங்களின் குழந்தையை பெற்றுக் கொள்ள போவதாகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு குழந்தை பிறக்க போவதை தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடியான அமித் ஷா மற்றும் ஆதித்யா ஆகியோர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "பாலைவனம் நடுவுல விமானமா?.. இது எப்படி பாஸ் இங்க?".. 20 வருஷம் கழிச்சும் நீடிக்கும் மர்மம்?!

AMERICA, COUPLE, TRADITIONAL MARRIAGE, FIRST CHILD

மற்ற செய்திகள்