'புதைக்குழியில் சிக்கிய கார்...' 'அடுத்த 10 நாள் மரத்தோட உச்சியில் வாழ்க்கை...' 'கீழ இறங்குனா உயிர் போயிடும்...' - படாத பாடு பட்ட தம்பதி...!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் வனத்திற்குள் சென்ற ஜோடி பத்து நாட்கள் உணவு தண்ணீர் இன்றி மரத்தின் உச்சியில் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்டன்-நீனா தம்பதியினர் வனப்பகுதியில் சாகச பயணம் செய்தனர். அப்போது அவர்கள் சென்ற கார் சற்றும் எதிரபாராத விதமாக புதைகுழியில் சிக்கிக் கொண்டது.
இரவு நேரம் நெருங்கி விட்டதால், காரை மீட்பதற்கான வழியும் இல்லை. அங்கிருந்து பேஸ் கேம்பிற்கு கார் இல்லாமல் இருட்டில் செல்ல முடியாது என்பதால் காலையில் தங்கள் பயணத்தை தொடரலாம் என முடிவெடுத்து இருவரும் காருக்குள்ளேயே படுத்துக் கொண்டனர்.
அன்றைய இரவை காருக்குள் கழித்துவிட்டு, காலை தேவையான பொருட்களை எல்லாம் பேக் செய்து எடுத்துக் கொண்டு பேஸ் கேம்ப் நோக்கி கொடிநடையாக அடர்ந்த காட்டிற்குள் நடக்க தொடங்கினர். காரை அங்கேயே விட்டு செல்வதால், காரில் பேஸ்கேம் செல்கிறோம் என்று ஒட்டி வைத்துவிட்டு புறப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் நடக்கத் தொடங்கிய கொஞ்சம் நேரத்திலேயே கரடி ஒன்று துரத்தியது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கரடியை விரட்ட முயன்றனர். ஆனால் கரடி அதற்கெல்லாம் அசருவதாக இல்லை. கரடி அவர்களை நோக்கி நெருங்கி வர, தப்பிக்க இது தான் வழியென்று இரண்டு பேரும் ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டனர்.
கரடி மரணத்தின் கீழே வந்து நின்றுக் கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் காத்திருந்துவிட்டு கரடி புறப்பட்டு சென்றுவிடும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் கரடி நகர்வதாக தெரியவில்லை. கரடியை விரட்ட மரத்தின் மேலிருந்து படாத பாடு பட்டனர். கரடி பசை போட்டு ஒட்டியது போல் அங்கேயே உட்கார்ந்துக் கொண்டது.
இதன் காரணமாக 10 நாட்கள் உணவு, நீர் எதுவும் இன்றி மரத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. பத்து நாட்கள் கழித்து அந்த வழியாக வந்த ஒருவர் காரை பார்த்துவிட்டு வனத்துறையினரை அழைத்து வந்து கரடியை விரட்டிவிட்டு இருவரையும் ஒருவழியாக மீட்டார்.
மற்ற செய்திகள்