"கல்யாணம் பண்ணா அந்த தீவுல தான் பண்ணுவோம்".. அடம்பிடித்த ஜோடிக்கு காத்திருந்த ஷாக்.. சட்டுன்னு போட்டோகிராஃபர் சொன்ன பலே யோசனை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களது திருமணத்திற்கு முந்தைய நாள் திருமணத்திற்கான ஆடைகளை தொலைத்து இருக்கின்றனர். இதனை அடுத்து வித்தியாசமான முறையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

"கல்யாணம் பண்ணா அந்த தீவுல தான் பண்ணுவோம்".. அடம்பிடித்த ஜோடிக்கு காத்திருந்த ஷாக்.. சட்டுன்னு போட்டோகிராஃபர் சொன்ன பலே யோசனை..!

Also Read | பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தா.. இலவசமா சாப்பாடு கொடுக்கும் உணவகம்..இது செம்ம ஐடியாவா இருக்கே..!

அமெரிக்காவை சேர்ந்தவர் பால். 37 வயதான இவர் 40 வயதான அமண்டா என்னும் பெண்மணியை காதலித்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது திருமணம் குறித்து திட்டமிட்டு வந்த இந்த ஜோடி, ஸ்காட்லாந்தில் உள்ள Isle of Skye எனும் தீவில் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர். இதற்காக 6400 கிலோமீட்டர் பயணித்து தீவை இருவரும் அடைந்திருக்கிறார்கள்.

இருவரும் சென்ற விமானம் தாமதமானதால் திட்டமிட்ட தேதிக்கு மூன்று நாட்கள் கழித்தே தங்களது கனவு தீவுக்கு சென்றிருக்கிறார்கள் இந்த தம்பதியர். அதாவது திருமண நாளுக்கு முந்தைய தினம் இருவரும் தீவை அடைந்திருக்கின்றனர். அப்போது அவசர அவசரமாக இருவரும் திருமண ஏற்பாட்டிற்கு தயாராக வேண்டிய சூழ்நிலையில், தங்களது உடைமைகளை பிரிக்கும் போதுதான் இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளில் திருமண உடைகள் இருந்திருக்கின்றன. திருமண உடைகள் இல்லாமல் என்ன செய்வது என்று திகைத்த ஜோடி வேறு வழியில்லாமல் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுத்திருக்கின்றனர்.

போட்டோகிராபர் சொன்ன யோசனை

திருமண உடைகள் காணாமல் போய் விட்டதால் கவலையடைந்த தம்பதியை அவர்களது புகைப்படக்காரரான ரோஸி சமாதானப்படுத்தி இருக்கிறார். மேலும் தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு சில மணி நேரங்களில் எஞ்சி இருந்த நிலையில் ரோஸி சொன்ன யோசனை திருமண தம்பதிகளுக்கு பிடித்திருந்தது. அதாவது உள்ளூர் மக்களிடையே திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என ரோஸி யோசனை கூறியுள்ளார்.

Couple Loses Luggage Before Dream Destination Wedding

இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது அமண்டாவிற்கு எளிதில் திருமண உடை கிடைத்துவிட்டது. ஆனால் பாலுக்கு கிடைத்ததோ பாவாடை போன்ற உடை மட்டுமே. ஸ்காட்லாந்தின் உயர் நிலங்களில் வசிக்கும் ஆண்கள் பாரம்பரியமாக திருமணங்களில் பயன்படுத்தும் கில்ட் எனப்படும் இந்த ஆடை பாலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு பாவாடை போன்றே காட்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக திருமண மோதிரங்கள் மற்றும் பூக்கள் பாலின் கைப்பையில் இருந்ததால் அந்த இரண்டும் பத்திரமாக இருந்திருக்கிறது. இதனையடுத்து இந்த காதல் ஜோடி எளிமையாக இயற்கை சூழலுக்கு மத்தியில் தங்களது திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

அடுத்த சோதனை

இருப்பினும் சோதனை அவர்களை விட்டபாடில்லை. தீவில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்படவே மேலும் கவலையடைந்த தம்பதிக்கு தனது நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்து அளித்திருக்கிறார் போட்டோகிராபர் ரோஸி. இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட இந்த புதுமண தம்பதியின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.

Couple Loses Luggage Before Dream Destination Wedding

திருமணத்திற்கு முந்திய நாள் உடைகளை தொலைத்த தம்பதி உள்ளூர் மக்கள் அளித்த ஆடைகளுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஸ்காட்லாந்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது

Also Read | "பாத்து பாத்து கஷ்டப்பட்டு கட்டுன வீடு'ங்க, இப்போ கண்ணும் முன்னாடியே.." 3 அடியால் வந்த பிரச்சனை.. தரைமட்டமான 1.5 கோடி ரூபாய் வீடு..

COUPLE LOSES LUGGAGE, WEDDING, USA

மற்ற செய்திகள்