‘திரும்பவும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

6 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்புவர்களால் வருவதால் அதிரடி நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘திரும்பவும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை’!

சீனாவின் வுஹானில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வுஹான் நகரில் கடந்த 8-ம் தேதி தான் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா மீண்டும் 2-வது அலையாக பரவி வருகிறது. சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு வாரங்கள் கழித்து நேற்று கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு திரும்பியவர்கள். அதிலும் ரஷ்யாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்கள். இதையடுத்து சீனா-ரஷ்ய எல்லையில் உள்ள Heilongjiang மகாணத்தில் இருக்கும் நகரங்களான சூஃபென்ஹே (Suifenhe), ஹர்பின் (Harbin) பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 28 நாள் சுய தனிமைப்படுத்தல் (Isolation) மற்றும் நியூக்ளிக் ஆசிட் பரிசோதனை (nucleic acid), ஆன்டிபாடி பரிசோதனை (antibody tests) ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதேபோல், ரஷ்யாவிலும், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.