'இது விளையாட்டு காரியம் இல்ல'... 'பெரிய விலை கொடுக்க போறீங்க'... உலக சுகாதார நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

'இது விளையாட்டு காரியம் இல்ல'... 'பெரிய விலை கொடுக்க போறீங்க'... உலக சுகாதார நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து இன்னும் பல நாடுகள் முழுமையாக மீளாத நிலையில், 3ம் அலை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் கடைகள், உணவகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதோடு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தொடர்பான விதிகளை எளிதாக்க முடிவு செய்துள்ளது.

Countries made premature rush to full normality, WHO Warning

இது தொடர்பாகப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால திட்டத்தின் தலைவர் மைக் ரியான், “இதேபோக்கு தொடர்ந்தால், கொரோனா வைரஸின் புதிய அலை வெகு தொலைவில் இருக்காது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரவில்லை” என்று எச்சரித்திருக்கிறார்.

Countries made premature rush to full normality, WHO Warning

இதற்கிடையே புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் நம்பப்படுகிறது. டெல்டா மாறுபாடு இப்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பதிவாகியுள்ளது. எனவே உலக நாடுகள் பலவும் அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டி இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்