'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
முகப்பு > செய்திகள் > உலகம்வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்கள் கொரோனா பாதிப்பால் அதிகளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளையில், கொரோனா வைரஸ் குறிப்பாக யாரைத் தாக்குகிறது, அதற்கான மற்ற சிகிச்சை முறைகள் என்ன என ஒருபக்கம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நோய் பரவத் தொடங்கியபோதே எதிர்ப்பு சக்தி இல்லாத வயதானவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டது. பின்னர் 2 வாரங்களுக்கு முன்பாக அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கொரோனாவால் ஆபத்து எனக் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வு முடிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வைட்டமின்-டி சத்து குறைபாட்டுடன் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள இங்கிலாந்து ஆய்வாளர்கள், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின்-டி சத்து அதிகமாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சத்து குறைபாடு காரணமாகவே அவர்களை வைரஸ் எளிதில் தாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வைட்டமின்-டி மிகவும் குறைவாக இருந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின்-டி சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா ஆகிய மீன்களிலும், ஆரஞ்சு பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் தாராளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.