'ஐயோ வேண்டாம் டா கண்ணா'... 'கட்டிப்பிடிக்க ஓடி வந்த மகன்'... நொறுங்கி போன டாக்டரின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த தந்தையைக் கட்டிப்பிடிக்க ஓடி வந்த மகனை, மருத்துவர் ஒருவர் தடுத்த வீடியோ பலரது நெஞ்சங்களையும் நொறுங்கி போட்டுள்ளது.

'ஐயோ வேண்டாம் டா கண்ணா'... 'கட்டிப்பிடிக்க ஓடி வந்த மகன்'... நொறுங்கி போன டாக்டரின் வீடியோ!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்நாட்டில் ருத்திர தாண்டவமாடிய கொரோனா வேகமாகப் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. தற்போது வரை உலகின் 196 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையே சீனாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், அதன்பின் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ருத்திர தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் சவுதியில் உள்ள மருத்துவமனையில் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய மருத்துவர் ஒருவரை அவரது மகன் கட்டிப்பிடிக்க ஓடி வந்த நிலையில், மகனைத் தடுத்து நிறுத்திய வீடியோ, மருத்துவரின் வலியையும், ஒரு தந்தையின் வலியையும் பலருக்குக் காட்டியுள்ளது. தனது தந்தை வீட்டிற்கு வந்ததும் அவரை கட்டிப் பிடிக்க அந்த சிறுவன் ஓடுகிறான்.

ஆனால் மருத்துவமனையில் அணிந்திருந்த ஆடையோடு அவர் வீட்டிற்குள் நுழைய, சுதாரித்துக் கொண்ட அந்த மருத்துவர் அந்த சிறுவனைத் தடுத்து நிறுத்தியதோடு, தலையில் கையை வைத்துக்கொண்டு கீழே அமர்கிறார். ஓடி வந்த சிறுவனுக்கு இது எதுவும் புரியாமல் வியப்புடன் நிற்கிறான். கொரோனாவிலிருந்து பலரைக் காப்பாற்றப் போராடும் மருத்துவர்களின் வலியினை உணர்த்துவதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

CORONA, CORONAVIRUS, SAUDI DOCTOR, HEART BREAKING