'தடுப்பூசியை' கண்டறிவதற்கு எந்த 'உத்தரவாதமும்' இல்லை... 'இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கை இழந்த பேச்சு...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாக உள்ளது. இங்கு நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனிடையே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஜுலை 1 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு நடைமுறைகளில் தளர்வை கொண்டுவரவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தடுப்பூசி கண்டறியும் சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் முயற்சிகள், ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை” என்று கூறினார்.