'தடுப்பூசி ரெடி'... 'டெஸ்ட்க்கு தயாரான 40 பேர்'... 'பில்கேட்ஸ்' அறக்கட்டளையில் தடுப்பூசி பரிசோதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தடுப்பூசி ரெடி'... 'டெஸ்ட்க்கு தயாரான 40 பேர்'... 'பில்கேட்ஸ்' அறக்கட்டளையில் தடுப்பூசி பரிசோதனை!

அனைத்து உலக நாடுகளாலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் கொரோனா. உலகையே ஆட்டிப்படைத்தது கொண்டிருக்கும் கொரோனாவிற்கு, இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் 13 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில், ஐஎன்ஓ - 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இது புதிய நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், இந்த தடுப்பூசி இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையைச் செய்வதற்காக 40 பேர் தயார்ப் படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்படும். இந்த பரிசோதனை வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.