கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் 2-வது அலை பரவ வாய்ப்புள்ளதால் 11 நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் ஊடரங்கை அறிவித்துள்ளன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்