‘கொரனோ வைரஸ் பாதிப்பு’.. அவசர அவசரமாக கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த ஆப்ரேஷன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர அவசரமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

‘கொரனோ வைரஸ் பாதிப்பு’.. அவசர அவசரமாக கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த ஆப்ரேஷன்..!

சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர சீன அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை வேகமாக கட்டி வருகிறது.

இந்த நிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக கருதப்படும் வுகான் நகரில் உடல்நிலை சரியில்லாமல் கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் குழந்தையை பாதுகாக்க எண்ணிய மருத்துவர்கள் அவருக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

CHINA, CORONAVIRUS, PREGNANT