‘அரச குடும்பத்திலும் கொரோனா பாதிப்பு’... ‘இங்கிலாந்து இளவரசருக்கு’... ‘வெளியான அரண்மனை அறிக்கை’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முதன்முறையாக அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘அரச குடும்பத்திலும் கொரோனா பாதிப்பு’... ‘இங்கிலாந்து இளவரசருக்கு’... ‘வெளியான அரண்மனை அறிக்கை’!

உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருவது கொரோனா வைரஸ். சீனாவை விட, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகளவில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. பிரிட்டனில் 281 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரிட்டன் அரண்மனையின் அடுத்த வாரிசான இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 71 வயதான சார்லஸ் தற்போது ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இளவரசர் சார்லஸுக்கு லேசான கொரோனா பாதிப்பு உள்ளது. எனினும் அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகிறார். அது போல் சார்லஸின் மனைவி கமீலா பார்க்கெருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதையடுத்து அவரும் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கூட கைகுலுக்குவதை தவிர்த்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இத்தனை முன்னெச்சரிக்கையாக இருந்த இளவரசருக்கு எப்படி கொரோனா வந்தது என தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.

BRITAN, BRITSH, CHARLES, PRINCE, COVID-19, LONDON, SCOTLAND