1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் லீ சீன் லூங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெரும்பாலான பணியிடங்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது 1,049 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
CORONAVIRUS, SINGAPORE, LOCKDOWN, COVID-19