கடைசியில் எறும்புத் தின்னிதான் காரணமா? பாம்பு, வௌவால் எல்லாம் அப்புறம் தானா... சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எறும்புத்தின்னி உடலில் இருக்கும் வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரசுடன் ஒத்துப்போவதால் இந்த வைரஸ் எறும்புத்தின்னியிடமிருந்து பரவியிருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசியில் எறும்புத் தின்னிதான் காரணமா? பாம்பு, வௌவால் எல்லாம் அப்புறம் தானா... சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு...

சீனாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து பரவி உள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். முதலில் வுகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்ட பாம்பு கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று தெரிவித்தனர். பின்னர் வௌவால்களிடமிருந்து பரவியதாக குறிப்பிட்டனர்.

இந்த நிலையில்  காட்டு விலங்குகளிடம் பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், எறும்பு தின்னி உடலில் இருக்கும் வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரசுடன் ஒத்துப்போவதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் பாம்புகளுக்கும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் பின்னர் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும் சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

CORONA, CHINA, WUHAN, ANTEATER, CHINESE SCIENTIEST