'இனிமேல் நீங்கள் சுதந்திர பறவைகள்'... 'பீஜிங் நகர மக்களுக்கு வந்த தித்திப்பான செய்தி'... படு குஷியில் பீஜிங்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி கண்டறியப்பட்ட கொரோனா இன்று உலகையே ஆட்டம் காண செய்துள்ளது.  46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்த 5 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில், உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது.

'இனிமேல் நீங்கள் சுதந்திர பறவைகள்'... 'பீஜிங் நகர மக்களுக்கு வந்த தித்திப்பான செய்தி'... படு குஷியில் பீஜிங்!

இந்நிலையில் சீன தலைநகரான பீஜிங்கில் உள்ள மக்களுக்கு, பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''பீஜிங் நகரில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய தேவையில்லை, என்றும் அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ள தகவலில். ''பொதுமக்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை. ஆனால் நிச்சயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் காக்கும் வகையில், வீட்டினுள்ளே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம்'' என தெரிவிக்கப்ட்டுள்ளது.

சீன பாராளுமன்ற கூட்டம் 22-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.