சீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தால்... ‘குவியும்’ பாராட்டுகள்...
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரபல ரக்பி வீரர் ஆம்புலன்ஸ் டிரைவராக ஆகியுள்ளார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கொரோனாவால் அதிகளவில் பாதிப்பை சந்தித்துவருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இங்கு சீனாவை விட அதிகமாகும். இந்நிலையில் இத்தாலியின் பிரபல ரக்பி வீரரான மாக்சிம் மபாண்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக ஆகியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டுக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே அடைந்து இருப்பதை விடுத்து ஆம்புலன்ஸ் ட்ரைவராக மாறியுள்ள 26 வயது மாக்சிம் மபாண்டாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “நான் மருத்துவத் துறையில் பணிபுரியாத போதும் அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டுமென நினைத்தேன். அதைத்தொடர்ந்து தற்போது முதியவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு சேர்க்கும் இந்தப் பணியை செய்யத் தொடங்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.