'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் யந்தாய் நகரில் கடல் உணவு பார்சலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'...

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், சீனாவில் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சீனாவின் துறைமுக நகரமான டலியனில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து எங்கிருந்து நோய் பரவுகிறது எனப் பார்த்தபோது இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு பார்சலில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் யந்தாய் நகரில் உள்ள 3 நிறுவனங்களில் உள்ள பார்சல்களின் வெளிப்புறத்தில் வைரஸ் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கடல்வழியாக டலியனில் இறங்கியுள்ள இந்த உணவு பார்சல்கள் எங்கிருந்து வந்தன எனத்  தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்த பார்சல்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பார்சல்களை கையாண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜுலை மாதம் டலியன் துறைமுகத்திற்கு ஈக்வடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால் பார்சலிலும் இதேபோல கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால், ஈக்வடாரின் 3 இறால் உற்பத்தியாளர்களிடமிருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்