‘கொரோனா அச்சத்தில் ஊரே காலியாக’.. ‘ஒரு குடும்பம் மட்டும் செய்த அதிர்ச்சி காரியம்’.. உறைந்து நின்ற அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸால் மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் எடுத்துவரும் நிலையில் இந்த வைரஸ் தொடங்கியதாக அல்லது உற்பத்தி ஆன இடமாகக் கூறப்படும் வுஹான் நகரில் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகள் சரிவர கிடைக்கப் பெறாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே வுஹான் நகரின் சந்தை பகுதியில் சீன அரசு பணியாளர்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நகரத்தில் உள்ள விலங்குகளை வேறு இடங்களுக்கு இடம் மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சீனாவின் வுஹான் நகரின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்கும் அந்தச் சந்தையில் உள்ள கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பொழுது அங்கு ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு,‘நீங்கள் ஏன் சந்தையில் தங்கி இருக்கிறீர்கள்?’ என்று அவர்களை அதிகாரிகள் கேட்டதாகவும் அதற்கு அந்த குடும்பம் பதிலளிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. எனினும் அவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்கள் சந்தையில் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.