'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...

கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா  ஆகிய நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் சீனர்கள் வழியாக சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா வெளியிட்டுள்ள அந்த செய்தியில், கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு சீனா பொருளாதார, சமூக வளர்ச்சி அடையும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.