‘7 நாளாக தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு’... ‘கதி கலங்கி நிற்கும் நாடு’...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் தொடர்ந்து 7 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், 11,012 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,09,688 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் கொரோனாவால் 88 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 1,915 ஆக அதிகரித்துள்ளது.
'கடந்த 2ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவில்தான் அதிகம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்' என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தொற்று பாதித்த தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ரஷ்யாவில் மே 11-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அதிபர் புடின் அறிவித்திருந்தார். ஆனால், பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதால், ரஷ்யாவில் இன்னும் இரு மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.