"6 அடி தூரம் சமூக விலகல் சேஃப் இல்லை..." 'குளிர்காலத்தில்' காத்திருக்கும் 'ஆபத்து...' 'எச்சரிக்கும்' புதிய 'ஆய்வுகள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் தன்மை கொண்டது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது. பேசுவதன் மூலமாக தெறிக்கும் துளிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது.
ஒருவர் சத்தமாக பேசும் போது, தொற்று உடைய 40 ஆயிரம் துளிகள் வெளியேறுகின்றன எனக் கூறப்படுகிறது. . புவி ஈர்ப்பு சக்தியால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடும் என்றாலும், அவற்றில் ஒரு சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணி நேரம் நீடிப்பதாக கூறப்படுகிறது. இவற்றால் 6 அடி வரைதான் பாதிப்பு என கடந்த கால ஆய்வுகள் தெரிவித்த நிலையில், தற்போது 20 அடி தூரம் வரை நோய் தொற்று பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இருப்பினும் முகக்கவசம் அணிவதாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதாலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை திறம்பட குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மற்ற செய்திகள்