Video: ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல... மொத்தம் '90 ஆயிரம்' பேருக்கு இருக்கு... 'நர்ஸ்' வெளியிட்ட ஷாக் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 56 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 1970 பேருக்கு இந்த பாதிப்பு  இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மனிதரில் இருந்து மனிதருக்கு நேரடியாக பரவும் இந்த வைரஸ் வவ்வாலை உண்ணும் கட்டுவிரியன் பாம்பில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Video: ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல... மொத்தம் '90 ஆயிரம்' பேருக்கு இருக்கு... 'நர்ஸ்' வெளியிட்ட ஷாக் வீடியோ!

இந்த நிலையில் இதுவரை மொத்தம் 90 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பணியில் இருக்கும் நர்ஸ் ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், '' நான் இங்கு உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். சீனாவில் தற்போதுவரை கொரோனோ வைரஸுக்கு 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன புத்தாண்டு(ஜனவரி 25) தற்போது பிறந்துள்ளது. எனினும் நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். கொண்டாட்டங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். வுகானில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர்கள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நமக்கான நேரம் மிகவும் குறைவாக உள்ளது.  உங்களால் முடிந்த அளவு முகமூடி, துணிகள், முகக்கண்ணாடி ஆகியவற்றை வழங்குங்கள்,'' என கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.