Video: அச்சுறுத்தும் 'கொரோனா'... கையோடு கொண்டுவந்த 'பொட்டலத்தை' வைத்துவிட்டு... வேகமாக 'ஓடிச்சென்ற' மர்ம நபர்... அதிர்ச்சியில் 'உறைந்த' காவல்துறை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை 563 பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 28 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்குநாள் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

Video: அச்சுறுத்தும் 'கொரோனா'... கையோடு கொண்டுவந்த 'பொட்டலத்தை' வைத்துவிட்டு... வேகமாக 'ஓடிச்சென்ற' மர்ம நபர்... அதிர்ச்சியில் 'உறைந்த' காவல்துறை!

இந்த நிலையில் சீனாவில் உள்ள காவல் நிலையத்துக்கு பொட்டலத்துடன் வந்த நபர் ஒருவரின் செய்கையால் அங்குள்ள காவல்துறையினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சாண்டோங் மாகாணத்தின் டோங்காங் நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு முதியவர் ஒருவர் கடந்த 31-ம் தேதி வந்தார். அவர் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பொட்டலத்தையும், கடிதத்தையும் போலீஸ் நிலையத்துக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதற்குள் 12 ஆயிரம் யுவான் இருந்தது (இந்திய மதிப்பில் ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரம்) இருந்தது. தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் பிரித்து படித்தனர். அந்த கடிதத்தில் தான் ஒரு துப்புரவு தொழிலாளி என்றும், தன்னுடைய சேமிப்பு பணத்தை கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும்படியும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதில் தன்னுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. இந்த செயல் சீன மக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.