‘ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்களாக மாறிய’ டாக்ஸி டிரைவர்கள்.. ‘அரண்டு போகும் கஸ்டமர்கள்!’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடும் நிலையில், இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா நோயை எதிர்ப்பதற்கான விழிப்புணர்வுகளும் தடுப்பு முறைகளும் உலக சுகாதார மையம் மற்றும் அந்தந்த நாடுகள், அரசுகள் உள்ளிட்டவற்றால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்கள் அங்கங்கே தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.
எனினும் சில இடங்களில் கொரோனா பரிசோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பாண்டமிக் நோய்த்தொற்று வகையிலான இந்த கொரோனாவை கண்டறிய அனைவரும் கையில் ஒரு கருவி வைத்திருக்கின்றனர். இந்த கருவியை வைத்து உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வருகின்றனர்.
இந்த கருவியினை தற்போது லண்டன் டாக்சி டிரைவர்களும் கையில் வைத்துக்கொண்டுள்ளதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதன்படி லண்டனில் ஒரு கார் ஓட்டி வரும் டாக்ஸி டிரைவர் ஒருவரை கஸ்டமர் ஒருவர் மறித்தபோது, அந்த டாக்சி டிரைவரும் வெகு வேகமாக எழுந்து வந்து கஸ்டமருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று
Taxi drivers in London #COVID19 pic.twitter.com/3js7ErdEok
— Harsh Goenka (@hvgoenka) March 15, 2020
பரிசோதனை செய்து விட்டு அதன் பின்னர் கஸ்டமரை தனது காருக்குள் அனுமதிக்கிறார். அந்த கஸ்டமர் தனது கார் கதவை தொட்ட இடத்தை அந்த டிரைவர் துடைக்கிறார். மேலும் கஸ்டமரின் கைகளில் கிருமி நாசினியையும் அந்த டிரைவர் தெளிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது.