'வீட்லயே பாதுகாப்பா இருங்க'... 'பிரதமர்' வெளியிட்ட 'வீடியோவால்'... 'கோபத்தில்' மக்கள்!...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

'வீட்லயே பாதுகாப்பா இருங்க'... 'பிரதமர்' வெளியிட்ட 'வீடியோவால்'... 'கோபத்தில்' மக்கள்!...

ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் வீட்டின் ஷோபாவில் அமர்ந்து வளர்ப்பு நாயைக் கொஞ்சுவது போலவும், தேநீர் அருந்துவது போலவும், புத்தகம் படிப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் அபே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கொரோனாவால் சிரமத்தில் உள்ள ஏழை மக்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக இந்த வீடியோ மீது விமர்சனம்  எழுந்துள்ளது. மேலும் அங்கு தனிமைப்படுத்துதலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.