முடிவுக்கு வருகிறதா கொரோனாவின் கொடுங்காலம்?.. 'மாபெரும் வெற்றி' என அறிவிப்பு!.. முண்டியடித்துக் கொள்ளும் உலக நாடுகள்!.. அடுத்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றாக திகழும் மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95 சதவீதம் திறன் கொண்டது என்பது பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில், முதல்கட்ட தரவுகளின் படி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திறம்பட தடுப்பு மருந்து செயலாற்றும் என்பது தெரியவந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இது எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. இந்தத் தடுப்பூசியை உருவாக்கி அதிக செயல்திறனுடன் அறிகுறி நோயைத் தடுக்கும் திறனைக் காண முடிந்தது ஆச்சர்யமாக இருந்தது" என்று மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டால் ஜாக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாததால், தடுப்பூசிக்கான பாதுகாப்புகளைக் குவித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்க மார்டனா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தங்களின் தடுப்பூசி 90 சதவீதம் பயனுள்ளதாகக் கூறியதை அடுத்து மாடர்னா நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்