உலகமே 'எதிர்பார்த்து' காத்திருக்கும் கொரோனா 'தடுப்பூசி'... 'எந்த' மாதத்திற்குள் தயாராகும்?... 'ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானி 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17,71,459 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசி எப்போது தயாராகும் என எதிர்பார்த்து உலகமே காத்து கொண்டிருக்கிறது.
இதுதொடர்பான ஆராய்ச்சி பணிகள் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சி குழுவிலுள்ள விஞ்ஞானி சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், எங்களுடைய குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும். அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை உள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் இந்த தடுப்பூசிக்கான சோதனைகளை மனிதர்கள் மீது நடத்தவுள்ளோம். இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என நம்புகிறேன். ஆனால் அதற்கு நாங்கள் இன்னும் சில தூரம் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் சரியாக செய்தால் நிச்சயமாக இது சாத்தியமாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட பார்வை" எனத் தெரிவித்துள்ளார்.