"உலகத்துலயே இந்த மருந்துங்கள... ட்ரம்ப் ஒருத்தருக்குதான் குடுத்துருக்காங்க..." - 'அவர் மட்டும் அதிவேகத்தில் குணமடைவது எப்படி??!'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்???'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து அதிவேகத்தில் குணமடைந்து வரும் நிலையில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

"உலகத்துலயே இந்த மருந்துங்கள... ட்ரம்ப் ஒருத்தருக்குதான் குடுத்துருக்காங்க..." - 'அவர் மட்டும் அதிவேகத்தில் குணமடைவது எப்படி??!'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்???'

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில்  உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப், புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார். அப்போது மாஸ்க்கை கழற்றி தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட டிரம்ப், கொரோனா வைரஸைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Corona US Trump May Be Only Patient On Planet To Get These 3 Drugs

மேலும் டிரம்ப் தன் ட்விட்டர் பதிவில், "கொரோனா பாதிப்பை கண்டு பயப்பட வேண்டாம். அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நாம் அளப்பரிய அறிவையும், சிறந்த மருந்துகளையும் உருவாக்கியுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நான் சிறப்பாக உணர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதித்த அதிபர் டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Corona US Trump May Be Only Patient On Planet To Get These 3 Drugs

இதற்கிடையே வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி ஒருவர், அதிபர் டிரம்ப் விரைவாக குணமடைந்து வருவதாகவும், சாதாரண நிலைக்கு அவர் மிக விரைவில் திரும்புவதுடன் அன்றாட பணிகளிலும் ஈடுபடுவார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பிற்கு வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்ப், ரெஜெனெரானின் சோதனை ஆன்டிபாடி சிகிச்சையைப் பெற்றுள்ளார். இது கொரோனா வைரஸின் அளவைக் குறைக்கலாம் மற்றும் 275 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் இது காட்டியுள்ளது.

Corona US Trump May Be Only Patient On Planet To Get These 3 Drugs

ஆனால் இந்த சிகிச்சைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. டிரம்பின் மருத்துவர்களிடமிருந்து வந்த "கருணை பயன்பாடு" கோரிக்கையைப் பெற்ற பின்னரே இந்த மருந்தை வழங்கியதாக பயோடெக் நிறுவனம் ரெஜெனெரான் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான மக்களுக்கு கருணை பயன்பாட்டுக் கோரிக்கையின் மூலம் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பெறுவது நீண்ட மற்றும் சவாலான செயல்முறையாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை ஆன்டிபாடி சிகிச்சையுடன் டிரம்பிற்கு ரெம்டெசிவிர் மற்றும் டெக்ஸாமெதாசோன் ஆகிய 2 மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona US Trump May Be Only Patient On Planet To Get These 3 Drugs

இதுகுறித்து பேசியுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜொனாதன் ரெய்னர், "உலகிலேயே இந்த 3 மருந்துகளை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட சிகிச்சையை பெறும் ஒரே நோயாளி அதிபர் ட்ரம்ப் மட்டுமே" எனத் தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மைய  ஒப்புதல் பெறாதபோதும், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதாவது சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான 3 மருந்துகள் டிரம்புக்கு அளிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்