2 வருஷமா கொரோனாவுக்கு தண்ணி காட்டிய தீவு.. கடைசியில எங்கள தேடியும் வந்துட்டியே.. புலம்பி தீர்க்கும் பொதுமக்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிரிபாட்டி: கொரோனா வைரஸ் பரவி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கிரிபாட்டி என்ற பசிபிக் பெருங்கடல் தீவில் தற்போது தான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

2 வருஷமா கொரோனாவுக்கு தண்ணி காட்டிய தீவு.. கடைசியில எங்கள தேடியும் வந்துட்டியே.. புலம்பி தீர்க்கும் பொதுமக்கள்

கிறிஸ்மஸ் நாடு என்று அழைக்கப்படும் இந்த நாட்டில் மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. அதோடு, அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டிருக்குமாம்.

கொரோனா பாதிப்பு இல்லாத தீவு:

இந்நிலையில் அனைத்து நாடுகளும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்கொண்டு வந்த நிலையில் கிரிபாட்டி (Kiribati) என்ற தீவில் மட்டும் கொரோனா பாதிப்பே இல்லையாம். ஏனென்றால் இந்த தீவு தனது எல்லையை இரண்டு ஆண்டுகள் மூடியுள்ளது. இந்நிலையில் தற்போது தங்களின் எல்லையை திறந்த நிலையில் மெல்ல மெல்ல இந்த தீவில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

corona spread to Kiribati, one of the Pacific countries

சிகிச்சைக்கு நியுசிலாந்து செல்லும் மக்கள்:

ஏனென்றால் கிரிபாட்டியில் தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகள் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்குமாம். அதோடு, மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் இருக்கும் காரணத்தால் அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக ஃபிஜி அல்லது நியூசிலாந்துக்குதான் செல்வார்களாம்.

தேங்காய் எல்லாம் ஒரு திணுசா இருக்கே.. சந்தேகப்பட்டு உடைத்துப் பார்த்த அதிகாரிகள்.. காத்திருந்த பெரிய ஷாக்..!

corona spread to Kiribati, one of the Pacific countries

ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள்:

இந்த மாதம்தான் தனது எல்லைகளை திறந்த நிலையில் இரு வருடங்களுக்கு முன் நாட்டைவிட்டுச் சென்ற மத போதர்கள் 50 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து கூறிய கிரிபாட்டி அதிபர் டேனட்டி மாமவ், 'கிரிபாட்டியில் தற்போது தனிமைப்படுத்துதல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சமூகப் பரவல் கண்டறியப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.

corona spread to Kiribati, one of the Pacific countries

மேலும், தேவாலயங்கள் சார்பிலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவி 2 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தாலும் இப்போது தான் இந்த தீவு கொரோனா வைரஸை எதிர்கொண்டு வருகிறது.

சேலம் அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?.. பயந்து ஓடிய மக்கள்.. உண்மை என்ன..? அதிகாரிகள் விளக்கம்..!

எனினும் உலக நாடுகளைப் பார்த்து கொரோனா வைரஸ் தொற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என கிரிபாட்டி அரசு அறிந்திருக்கும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

CORONA SPREAD TO KIRIBATI, PACIFIC COUNTRIES, கிரிபாட்டி, கொரோனா வைரஸ், கிறிஸ்மஸ் நாடு

மற்ற செய்திகள்