இது என்ன 'ஒலிம்பிக் கோல்டு' மெடல் 'லிஸ்டா...?' இதைப் போயி 'கவுரவம்னு' சொல்றாரு... 'அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது என்பது கவுரவத்திற்கான அடையாளம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்து விட்டது.
இந்நிலையில், உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ளது என்பது கவுரவத்திற்கான அடையாளம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மற்ற நாட்டை விட அதிகமான சோதனைகள் நடத்தியதால் தான் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். அமெரிக்கா மிகப் பெரிய நாடு என்பதால் இங்கு நிறைய பாதிப்புகள் இருப்பது சாத்தியமானதுதான் எனக் குறிப்பிட்ட அவர், நான் அதை ஒரு மோசமானதாக பார்க்கவில்லை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நான் அதை நல்ல விஷயமாக பார்க்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் எங்கள் சோதனை மிகவும் சிறந்தது என்று அர்த்தம் என்று அவர் கூறினார்.
அதிபரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.