"இந்தியாவுல கொரோனா அவ்ளோ வேகமா பரவவே இல்ல!".. 'ஆனா அதே சமயம்'.. 'உலக சுகாதார' மைய 'அதிகாரி' சொல்லும் 'புது தகவல்'!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், 6 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சைக்காக போராடி வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு முதன்முதலாக பிறப்பித்த மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 இலக்கத்தை தொடாமலே இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 6 இலக்கத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 3 இலக்க எண்ணிக்கையில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 இலக்கத்திற்கு போய்விட்டது.
எனினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால சட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் ஜெனிவாவில் இது பற்றி பேசும்போது இந்தியாவில் மட்டுமல்லாது தெற்காசியாவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் மக்கள்தொகை அடர்த்தியாக இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவவில்லை என்றும், ஆனால் அதற்கான ஆபத்து எப்போதும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் சமூகங்களில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருப்பதால், எந்த நேரத்திலும் அது வேகமெடுக்கும் என்று எச்சரித்துள்ளார். அதேமாதிரி கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை அவர் பாராட்டத் தவறவில்லை என்பதும் இந்தியா மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்திருக்கும் நிலையில் ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, மக்கள் தொகை அடர்த்தி உள்ளிட்ட பெரிய பிரச்சினைகள் இந்தியாவில் முக்கிய பிரச்சினைகளாக உள்ளதையும், அதனால் தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்