'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'
முகப்பு > செய்திகள் > உலகம்வலிமை வாய்ந்த புற ஊதாக் கதிர்கள் 90 சதவீத கோவிட் 19 வைரஸ் கிருமிகைள அழிக்கவல்லத என வைரலாஜிஸ்ட்டகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சளி இருமல் துளிகளில் உள்ள கோவிட் 19 வைரசை அழித்து விடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்காக வெவ்வேறு பகுதிகளில் வைராலஜிஸ்ட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க தேசிய உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில் 90 சதவீத கொரோனா வைரஸ்கள் கோடை கால வெயிலில் 6 நிமிடங்களிலும், குளிர்கால சூரிய வெளிச்சத்த்ல் 19 நிமிடத்திலும் சிதைவுறுவதாக கண்டுபிடித்தள்ளனர்.
இதேபோல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வறண்ட வானிலையில் 6 டிகிரி வெப்பத்தில் ஃப்ளூ உள்ளிட்ட வைரஸ்கள் அனைத்தும் 23 மணி நேரத்திலும், 32 டிகிரி வெப்பத்தில் ஒரு மணி நேரத்திலும் அழித்து விடுகின்றன எனக் கூறுகின்றனர்.
இதனால் மக்களை வெளியே நடமாட அனுமதிப்பதை விட லாக்டவுனில் வீட்டக்குள் முடக்கி வைப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடுகின்றனர். மக்கள் வெளியே நடமாடுவதன் மூலம் நமது உடலில் உருவாகும் விட்டமின் டி நோய எதிர்ப்பு மண்டலத்தை அதிக வீரியத்துடன் செயல்பட வைக்கும் என்றும் வைராலஜி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்