‘லாக்டவுனை மீறிய 16 வயது இளைஞரை நோக்கி’... ‘துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி!’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அர்ஜெண்டினாவில் கொரோனாவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேரத்தில் 16 வயது இளைஞர் வெளியில் சுற்றியதால் அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லாக்டவுனை மீறிய 16 வயது இளைஞரை நோக்கி’... ‘துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி!’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனாவில் இருந்து தப்பிக்க, கொரோனா பரவுவதை தடுப்பது முக்கியமானதாக கருதப்பட்டது. இதனை அடுத்து சமூக விலகல்,  சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அப்படித்தான் அர்ஜெண்டினாவிலும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த நேரத்தில் லாக்டவுனை மீறி வெளியே வந்து சுற்றிய 16 வயது புள்ளிங்கோ இளைஞரை பார்த்துள்ளார். ஆனால் போலீஸாரை பார்த்ததும் அந்த இளைஞர் ஓட முயற்சிக்க, கடுப்பான அந்த காவலர் துப்பாக்கியால் இளைஞரை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அவர் மீது குண்டடி படாமல், ஜஸ்ட் மிஸ் ஆக, எப்படியோ இளைஞர் பிடிபட்டுவிட்டார்.

ஆனால் உணர்ச்சிவசப்பட்டு ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்த இளைஞருக்கு புத்தி சொல்லாமல், சுட முயற்சித்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, அவர் உளவியல் சிகிச்சைக்காகவும் அனுப்பப்பட உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் வீடியோக்களாக பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ARGENTINA, COPS