வெள்ளத்தில் சிக்கிய காருக்குள்ள இருந்து கேட்ட குரல்.. துணிஞ்சு களத்துல இறங்கிய அதிகாரிகள்.. உலக அளவில் பரபரப்பை கிளப்பிய வீடியோ.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய காரிலிருந்து பெண் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் மீட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் அரிசோனா, கெண்டகி உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்படைந்திருக்கிறது. இந்நிலையில், மக்கள் ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட காரில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்படும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய கார்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அப்பாச்சி ஜங்க்ஷனில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண் வெள்ள நீரில் சிக்கியுள்ளார். அதிவேகத்தில் பாய்ந்தோடிய வெள்ள நீரில் கார் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் காரில் இருந்து வெளிவர முடியாமல் தவித்த அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டிருக்கிறார். இந்நிலையில், அங்குவந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணை மீட்கும் பணியில் இறங்கினர்.
காரின் கண்ணாடியை உடைத்த அதிகாரிகள், மஞ்சள் நிற கயிறு ஒன்றை காருக்குள் வீசியுள்ளனர். அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு வெளியே வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த பெண்ணும் கயிறை பிடித்தபடி வெளியே வந்திருக்கிறார். அதேநேரத்தில் காருக்குள் சிக்கியிருந்த பெண்ணுடைய நாய்க்குட்டியும் மீட்க முடியாமல் போயிருக்கிறது. இது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி உடலில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோ
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில்,"ஜூலை 28, 2022 அன்று, வெள்ளம் தொடர்பான சேவைக்கான 24 வெவ்வேறு அழைப்புகளுக்கு அப்பாச்சி சந்திப்பு காவல் துறை பதிலளித்தது. இந்த வீடியோ பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த மீட்பு பணியில் இரண்டு அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கிருந்த நபர் ஒருவர் கயறு ஒன்றை அளித்து பெண்ணை வெளியே எடுக்க உதவி செய்தார். அவருக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த பெண்ணை எங்களால் மீட்க முடிந்தாலும், அவரது நாயை மீட்க முடியாமல் போனது குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
On July 28, 2022, the Apache Junction Police Department responded to 24 different calls for service related to flooding.
The incident you will see in this AJPD officer body camera is from a rescue of a motorist stranded in Weekes Wash.
(1 of 5) pic.twitter.com/WXrrJMO6dp
— AJ Police Department (@AJPoliceDept) July 30, 2022
Also Read | சிலந்திக்கு முடிவுகட்ட வாலிபர் எடுத்த முடிவு.. அடுத்த நாள் மொத்த நாடும் ஷாக் ஆகிடுச்சு..!
மற்ற செய்திகள்