'காதலிக்காக தனியார் நிறுவனரின் பார்ட்டி'.. ஜன்னல் வழியே கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி!.. போலீஸ் வந்து பார்த்தபோது அப்படியே ‘தலைகீழாய்’ மாறிய ‘டிவிஸ்ட்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டனில் தனியார் ஜெட் நிறுவன அதிபரான Steve carano (64) என்பவர் தனது காதலி லிசா டெக்னிகஸ் எனும் 56 வயதுடையவருக்காக பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை சர்ப்ரைஸாக ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பிறந்த நாள் பார்ட்டிக்காக ஆன்லைன் மூலம் 70 நண்பர்களை இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த 70 நண்பர்களின் கட்டவுட்களையும் தயார் செய்து தனது வீட்டுக்குள் நிறுத்தியும் வைத்திருக்கிறார்.

'காதலிக்காக தனியார் நிறுவனரின் பார்ட்டி'.. ஜன்னல் வழியே கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி!.. போலீஸ் வந்து பார்த்தபோது அப்படியே ‘தலைகீழாய்’ மாறிய ‘டிவிஸ்ட்’!

அதன்பிறகு அந்த நண்பர்களை ஆன்லைனில் வீடியோ வழியில் இணையச் செய்து பார்ட்டியைத் தொடங்கியுள்ளார். அவ்வளவுதான் Steve-வின் வீடு அமைந்துள்ள பகுதி வழியே சென்ற சிலர் அவரது வீட்டில் தென்பட்ட அதிக வெளிச்சத்தையும் ஆட்கள் நிறைய பேர் அவரது வீட்டில் இருப்பது போல் தெரிந்த தோற்றத்தையும் அலங்காரம் செய்யப்பட்ட வாகனம் வந்ததையும் கண்டுள்ளனர்.

உடனே அவரது வீட்டுக்குள் ஏராளமானோர் ஒன்றாகக்கூடி பிறந்தநாள் பார்ட்டி நடத்துவதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதைக் கேட்டதும், செம்ம கோபமாக உடனடியாக Steve-வின் வீட்டுக்கு போலீஸானர் வந்துள்ளனர். Steve-வின் வீட்டுக்கதவை போலீசார் கட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்த Steve போலீசாரை கண்டதும் ஆச்சரியப்பட்டுள்ளார்.

அப்போது போலீசாரோ Steve-வின் வீட்டை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் Steve தான் நடத்துவது ஆன்லைன் பாட்டிதான் என்று கூறியும் போலீசார் அதனை நம்பாமல் Steve-வின் வீட்டுக்குள் ஒரு ராணுவ படையாக செல்வது போல சுமாராக 10 போலீசாருடன் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து Steve-வின் அறைகளை சோதனை விட்டனர்.

ALSO READ: “யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!

இறுதியாக வீட்டில் நடந்தது ஆன்லைன் பிறந்தநாள் பார்ட்டி தான் என்கிற உண்மை புரிந்ததும் போலீசார் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு வீட்டைவிட்டு விடைபெற்றுச் சென்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு ‘கண்ணால் பார்ப்பதெல்லாம் மெய்’ என நினைத்துக்கொண்டு போலீஸாரை வரவழைத்தவர்கள் தான் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்