மொத்தம் 44 பேர்.. துண்டு துண்டாக வெட்டி 'பிளாஸ்டிக்' பைகளில் அடைக்கப்பட்ட கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சினிமா பாணியில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் சிலசமயம் உலகையே உலுக்கி விடுவதுண்டு. அந்த வகையில் மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் தீவிர அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மொத்தம் 44 பேர்.. துண்டு துண்டாக வெட்டி 'பிளாஸ்டிக்' பைகளில் அடைக்கப்பட்ட கொடூரம்!

மெக்சிகோ நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கடத்துபவர்களின் கூடாரமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு அவ்வப்போது தொழில்போட்டி காரணமாக போதைப்பொருள் கும்பல்கள் மோதிக்கொள்வதால் ஏராளமானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் இங்குள்ள மிகப்பெரிய நகரமான குவாடலஜரா பகுதியில் உள்ள பாழுங்கிணறு ஒன்றில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து அந்த கிணற்றை சோதனை செய்த காவல்துறையினர் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் கிணற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல்கள் இருந்துள்ளன. மொத்தம் 120 பிளாஸ்டிக் பைகளில் 44 பேரின் உடல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுநர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

MURDER, MEXICO