போய் வாடா என் தங்கமே...! 'நீ தான் எனக்கு எல்லாம் என நெஞ்சை இறுக்க கட்டி பிடிச்சிட்டே...' - உடைந்து நொறுங்கிய கேர் டேக்கர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாகவே உயிரியல் பூங்காவில் இருக்கும் வனவிலங்குகள் அதன் பராமரிப்பாளருடன் அன்பாக இருக்கும். இருவருக்கும் இடையே ஒரு அழகான உறவு இருக்கும்.
அதுபோல விருங்கா தேசிய பூங்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு காங்கோவில் இருக்கும் கொரில்லா இரண்டு தன் பராமரிப்பாளர் ஆண்ட்ரே பாவுமா எடுத்த செல்ஃபிக்கு அழகாக போஸ் கொடுத்தது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வனப்பகுதியில் கடந்த 2007ல் டகாஸி என்ற கொரில்லா குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 2 மாதங்களே ஆன அந்த குட்டிக்குரங்கு தனது தாய் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கூட அறியாமல் அதன் சடலத்தைக் கட்டிக்கொண்டு கிடந்தது.
இந்நிலையில் அந்த கொரில்லா குரங்கு விருங்கா தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு மலையக கொரில்லாக்களை பாதுகாப்பவரான ஆண்ட்ரே பவுமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த கொரிலாவிற்கு ஆண்ட்ரே டகாஸி என்று பெயரும் வைத்துள்ளார்.
அதன்பின் கடந்த 2019-ஆம் ஆண்டு டகாஸியும், இன்னொரு பெண் கொரில்லாவான ஆண்ட்ரேவுடன் அழகான புன்னைகையுடன் போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டது. இந்த செல்ஃபி உலகம் முழுவதும் பரவி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்தது.
அப்போது முதல் டகாஸி உலகின் செல்லப்பிள்ளையாகி இருந்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டகாஸிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட டகாஸி யாரிடம் முதன்முதலில் தஞ்சம் அடைந்து அன்பை பெற்றதோ அதே பவுமாவின் மடியிலேயே நெஞ்சில் சாய்ந்து அவரை அரவணைத்தபடியே கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி டகாஸி தன் உயிரைவிட்டது.
இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஆண்ட்ரே பாவுமாவிடம் கேட்டபோது இப்போதிருக்கும் மனநிலையில் தான் பேச தயாராக இல்லை என ஆண்ட்ரே பவுமா கூறி, ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளார்.
அதில், 'நான் என் குழந்தையை இழந்துவிட்டேன். டகாஸியுடன் பழகிய நாட்களில் மனிதர்களாகிய நமக்கும் கொரில்லா ஏப்களுக்கும் இடையே ஏன் நெருக்கம் தேவை என்னவென்பதை உணர்ந்தேன்.
அவளுடைய புன்னகை பூக்கும் முகம் ஒவ்வொரு முறை நான் அவளைப் பார்க்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்' என உணர்வுப்பொங்க குறிப்பிடுள்ளார்.
மற்ற செய்திகள்