மரித்த பின் சடலங்களை விற்று வந்த பெண்.. அங்க தான் ட்விஸ்ட்.. திடீரென அம்பலமான பகீர் பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 45 வயதான பெண்மணி ஒருவர் இறுதிச் சடங்குகளை நடத்தும் இல்லம் ஒன்றை தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்.

மரித்த பின் சடலங்களை விற்று வந்த பெண்.. அங்க தான் ட்விஸ்ட்.. திடீரென அம்பலமான பகீர் பின்னணி

ஆனால் இதிலிருந்து அவர் சடங்குகளை விற்று பணம் ஈட்டியிருக்கும் சம்பவம் தற்போது தெரிய வந்திருக்கிறது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவ ஆய்வுக்காக சடலங்களை விற்றுள்ளதாக 45 வயதான மேகன் ஹெஸ் என்கிற அந்த பெண்மணி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சடலங்களை முறையாக எரித்து விட்டதாக சம்பந்தப்பட்ட சடலங்கள் தொடர்புடைய குடும்பத்தினரிடம் தவறுதலான தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக அளித்திருக்கிறார் இந்த பெண்மணி. இதேபோல் சடலத்துக்கு சொந்தக்காரர்களிடம் சடலங்களை உடல் கூறு ஆய்வுக்காக ஒப்படைக்கலாம் என்கிற ஒப்புதல்களை அவர்களே அளித்தது போல் போலியான ஆவணங்களை தயாரித்திருக்கிறார்.

இந்த விஷயங்கள் அனைத்தும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. அது மட்டும்இன்றி மரித்த மனித உடல்களை சேகரித்து அவற்றில் இருக்கும் தங்கப் பற்களையும் எடுத்திருக்கிறார். இந்த தங்கப்பதற்களை 40 ஆயிரம் டாலர் வரையில் மேகன் ஹெஸ் விற்று சம்பாதித்திருக்கிறார். இவற்றைத் தவிர இவர் நடத்தி வந்த இந்த இறுதிச் சடங்கு இல்லத்துக்கு ஒரு சடலத்துக்கு ஆயிரம் டாலர் வீதம் கடனமாக வசூலித்து இருக்கிறார்.

சில சமயங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை செய்து வந்தாலும், அந்த சடலங்களையும் இவர் எரியட்டுவதற்கு பதில் உடல் பாகங்களை தனித்தனியே பிரித்து மருத்துவ மாணவர்களுக்காக விற்பனை செய்து அதில் பணம் சம்பாதித்து வந்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. உறவினர்களுக்கு சாம்பலை தருவதற்கு பதிலாக ரசாயன பொருட்களை அளித்து ஏமாற்றி இருப்பதாகவும், இது தொடர்பான இவர் செய்த இந்த குற்றங்களுக்கு 12 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Colorado undertaker secretly selling dead people for cash

தற்போது மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாயார் இருவரும் 3 வார கால நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைக்கப்பட இருக்கின்றனர். 2010 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்து வந்திருக்கின்றன. பின்னர் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர்கள் குறித்த விசாரணை தகவல்கள் தற்போது வெளி வந்திருக்கின்றன.

WOMAN

மற்ற செய்திகள்