47 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மாணவன்.. உடல் பாகங்கள் கிடைச்சாலும் தொடரும் அந்த ஒரு மர்மம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் ஒருவர் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

47 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மாணவன்.. உடல் பாகங்கள் கிடைச்சாலும் தொடரும் அந்த ஒரு மர்மம்!!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | குறையொன்றுமில்லை.. மனமகிழ்ச்சியுடன் மணமுடித்த மாற்றுத் திறனாளி தம்பதிகள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் Kyle Clinkscales. இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கடைசியாக தென்பட்டுள்ள சூழலில், அதன் பின்னர் திடீரென காணாமல் போயுள்ளார். முன்னதாக, தனது கல்லூரிக்கு இவர் காரில் சென்ற போது, கைலை கடைசியாக ஒருவர் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், அதன் பிறகு அவர் எங்கும் கிடைக்காத சூழலில், அவர் காருடன் மாயமாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், சுமார் 45 ஆண்டுகள் கழித்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைல் க்ளின்க்ஸ்கேல்ஸின் கார், அலபாமாவில் உள்ள சிறிய ஓடை ஒன்றிற்கு அருகே இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

College student who missed in 1976 identify after 47 years

Images are subject to © copyright to their respective owners.

அந்த காருக்குள் கைலின் அடையாள அட்டை, ஐடி உள்ளிட்டவை இருந்துள்ளன. மேலும் மனித உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டிருந்த சூழலில், அது கைல் தானா என்பதை உறுதி செய்யவும் காரில் கிடைத்த மனித உடல் பாகங்களை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வந்தது. இந்த நிலையில், அது கைல் தான் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

College student who missed in 1976 identify after 47 years

Images are subject to © copyright to their respective owners.

அதே வேளையில், இன்னும் சில தகவல்களும் மர்மமாகவே இருப்பதும் கடும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. 45 ஆண்டுகள் கழித்து கிடைத்த கல்லூரி மாணவர் கைல் உடல் பாகங்கள் மற்றும் எலும்புக் கூடு ஆகியவை இருக்கும் நிலையை வைத்து அவரது இறப்பிற்கான காரணம் குறித்து தெரிந்து கொள்ள முடியாத சூழலும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

College student who missed in 1976 identify after 47 years

Images are subject to © copyright to their respective owners.

கைல் க்ளின்க்ஸ்கேல்ஸ் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தாரா அல்லது விபத்தில் சிக்கினாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்பதை கண்டுபிடிக்காத நிலையும் உள்ளது. அதே வேளையில், 2021 ஆம் ஆண்டின் போது கைலின் பெற்றோர்கள் அவரது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தங்களுக்கு வந்த அழைப்பில் மர்ம நபர் ஒருவர் பேசிய விஷயத்தை அவர்கள் பொது வெளியில் பகிரவும் செய்திருந்தனர்.

சுமார் 47 ஆண்டுகள் கழித்து காணாமல் போன கல்லூரி மாணவர் உடல் பாகங்கள் குறித்த உண்மை தெரிய வந்தாலும், அவர் இறப்புக்கான காரணம் மர்மமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "தோனி, ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் நடுவுல இப்டியும் ஒரு ஒற்றுமையும் இருக்கா?".. இது தெரியாம போச்சே.. வைரலாகும் மற்றொரு சம்பவம்!!

COLLEGE STUDENT, MISSING CASE, IDENTIFY

மற்ற செய்திகள்