எதே 2 காபி ரூ.3.6 லட்சமா?.. அதிர்ச்சியான தம்பதி.. அப்புறம் தான் உண்மையே தெரிஞ்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் காபி குடிக்க சென்ற ஒரு தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அந்த காபி ஷாப். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதே 2 காபி ரூ.3.6 லட்சமா?.. அதிர்ச்சியான தம்பதி.. அப்புறம் தான் உண்மையே தெரிஞ்சிருக்கு..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | தவளை கல்யாணம் கூட கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது புதுசா இருக்குப்பா.. விநோத சம்பவம்..!

உலக அளவில் தினசரி காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சொல்லப்போனால் ஒவ்வொரு தினத்தையும் காபியுடன் துவங்க ஏராளமானோர் நினைக்கின்றனர்.  அப்படியானவர்களில் ஒருவர் தான் ஜெஸ்ஸி ஓடேல் இவரும் இவருடைய மனைவி டிடி. இவர்கள் எப்போதும் அருகில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்று காபி அருந்துவது பழக்கம். அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதி கடந்த ஜனவரி 7ஆம் தேதி அருகில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்றிருக்கின்றனர். அப்போது தனக்கும் தனது மனைவிக்கும் ஜெஸ்ஸி காபி வாங்க நினைத்திருக்கிறார்.

Coffee chain Outlet bills 4000 USD for 2 cup coffee In US

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு ஒரு ஐஸ் அமெரிக்கனோவையும், தனக்காக ஒரு வென்டி கேரமல் ஃப்ராப்புசினோவையும் ஜெஸ்ஸி ஆர்டர் செய்ததாக தெரிகிறது. வழக்கமாக இதற்கு 10 டாலர்கள் செலவாகுமாம். ஆனால் அன்றைய தினம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களுடைய காபிக்கான பில்லில் 4,456.27 அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.6 லட்ச ரூபாய்.

காபி பில்லை உடனடியாக சரிபார்க்காததால், தனது கணக்கில் இருந்து எவ்வளவு பணம் கழிக்கப்பட்டது என்பதை ஜெஸ்ஸி உணரவில்லை. இதனை தொடர்ந்து ஷாப்பிங் சென்றபோது அவருடைய டெபிட் கார்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் காபி பில்லிற்கு ஏராளமான தொகை பிடிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து காபி ஷாப்பிற்கு தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளனர் தம்பதி.

Coffee chain Outlet bills 4000 USD for 2 cup coffee In US

Images are subject to © copyright to their respective owners.

அப்போது அந்த காபி ஷாப் இரண்டு காசோலைகளை அனுப்பியதாகவும் அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த காபி ஷாப்பின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 30 - 40 முறை தொடர்பு கொண்டதாகவும் ஜெஸ்ஸி கூறியிருக்கிறார். தொடர்ந்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் தாய்லாந்து செல்வதாக இருந்த தங்களுடைய பயணத் திட்டம் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெஸ்ஸி கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், இந்த சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் எனவும் தம்பதி செலுத்திய கூடுதல் தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் காபி ஷாப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இதனிடையே, ஜெஸ்ஸியின் காபி பில்லின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | நாங்க இருக்கோம்.. துணிச்சலாக களத்தில் இறங்கிய இந்திய பெண் அதிகாரி.. துருக்கி பெண் காட்டிய பாசம்.. இந்திய ராணுவம் பகிர்ந்த புகைப்படம்..!

COFFEE, COFFEE SHOP, COFFEE BILL

மற்ற செய்திகள்